சிறுமியை அடித்து துன்புறுத்திய தாய் விளக்கமறியலில்

327 0

pic-2-730x410யாழ்ப்பாணம் நீர்வேலி பிரதேசத்தில்  கடந்த மாதம்  சிறுமியை அடித்து துன்புறுத்திய அச் சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில், நேற்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையில் அப் பெண்ணை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனடிப்படையில், குறித்த பெண் எதிர்வரும் 2௦ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரின் குழந்தைகள் இருவரும் தொடர்ந்தும் நாயன்மார்கட்டு சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த வழக்கு விசாரணை இன்றைய தினம் இடம்பெற இருந்த போதிலும், நேற்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.