பாதாள உலக கும்பல் முக்கியஸ்தர் கைது

329 0

arrestதெற்கு பாதாள உலகக் குழுவின் பிரபல உறுப்பினர் (வயது – 27) என கருதப்படும் மாதம்பே சுமுது எனப்படும் சுமுது பிரியங்கர டி சில்வா நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அம்பலாங்கொடை ஊறுகஹ மற்றும் வெலிப்பென்ன பகுதிகளில் இடம்பெற்ற கொலைகளுடன் நேரடி தொடர்புடையவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடுவல பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.