வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி மடுக்கந்தை குடாகச்சகொடி காட்டுப்பகுதியிலிருந்து பல ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை விஷேட அதிரடிப்படையினர் மீட்டெடுத்துள்ளனர்.
குடாகச்சகொடி காட்டுப்பகுதியில் மரக்கடத்தல் , மண் அகழ்வுகளை தடுக்கும் நோக்கில் மடுக்கந்தை விஷேட அதிரடிப்படையினர் விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது காட்டுப்பகுதியிலிருந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை விஷேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
எம்.பி.என்.ஜி ரக துப்பாக்கி – 59 , மோட்டர் துப்பாக்கி – 1 , 356 ரக துப்பாக்கி – 5 , எல்.எம்.ஜி – 1 , எச்.கே7 துப்பாக்கி – 2 , 60மில்லி மீற்றர் மோட்டார் – 1 , 356 ரக மேகசின் – 4 ஆகியவற்றை மீட்டெடுத்த விஷேட அதிரடிப்படையினர் அவற்றை வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மீட்கப்பட்ட ஆயுதங்கள் விடுதலைப்புலிகளுடையதா? என்ற விசாரணை இடம்பெற்று வருவதுடன் மீட்கப்பட்ட ஆயுதங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.