சிறீலங்காவின் அதிபர் மைத்திரிபாலசிறிசேனவின் பாதுகாப்பு ஆலோசகராக சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரி நிமால் லெகே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற மூத்த பிரதிக் காவல்துறை அதிபரான இவர், முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு, வெடிபொருட்களைக் கையாளுதல் மற்றும் தீவிரவாத முறியடிப்புத் துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்.
இவர் அமெரிக்கா, இஸ்ரேல், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் பயிற்சிபெற்றதுடன், வெளிநாடுகளில் நடைபெற்ற பாதுகாப்புக் கருந்தரங்குகளிலும் கலந்துகொண்டவர்.
கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளுக்கெதிரான தாக்குதல்களில் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன், நெருக்கடியான காலகட்டங்களில் சிறீலங்காவின் உயர்மட்ட அதிகாரிகளின் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்றம், விமான நிலையம் உள்ளிட்ட கேந்திர நிலைகளின் பாதுகாப்புத் திட்டங்களை வகுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.