மாத்யூ புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 108-ஆக உயர்வு

310 0

201610070128361881_death-toll-from-hurricane-matthew-rises-to-108-after-haiti_secvpfஹைதி மற்றும் டொமினிக்கன் குடியரசு நாடுகளை தாக்கிய மாத்யூ புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 102-ஆக உயர்ந்துள்ளது.அமெரிக்காவுக்கு தென் பகுதியில் உள்ள கரிபீயன் கடல் பகுதியில் புயல் மையம் கொண்டிருந்தது. மாத்யூ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் நேற்று ஹைதி மற்றும் டொமினிக்கன் குடியரசு நாடுகளை தாக்கியது.
கடந்த 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இந்த புயல் மிக மோசமாக இருந்தது. 230 கிலோமீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. அங்குள்ள மரங்கள், வீடுகளை இடித்துத் தள்ளி ஆற்றுக்குள் கொண்டுத் தள்ளியது. இதனால் இரு நாடுகளிலும் கடுமையான சேதம் ஏற்பட்டன.

இந்நிலையில், மாத்யூ புயலுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 108-ஐ எட்டியுள்ளது. முன்னதாக ஹைதி நாட்டில் மட்டும் 98 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதனையடுத்து, தற்போது இந்த மேத்யூ புயல் புளோரிடாவை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்க நேரப்படி இன்று நள்ளிரவு முதல் எந்தநேரத்திலும்  புளோரிடாவை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புளோரிடாவை தொடர்ந்து புயல் தெற்கு கரோலினா, வடக்கு கரோலினா, ஜார்ஜியா, விர்ஜினியா, மேரிலேண்ட் ஆகிய பகுதிகளையும் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.