ஆணவ கொலைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் கடுமையான சட்டம் நிறைவேற்றம்

301 0

201610070614561485_pakistan-passes-longawaited-law-against-honour-killings_secvpfஆணவ கொலைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு காரணங்களுக்காக கவுரவ கொலைகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் சாதி, மதம், கவுரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த கொலை அன்றாடம் நிகழ்த்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.
இது இந்தியாவில் மட்டுமல்லாமது பாகிஸ்தானிலு ஒரு சிக்கலான பிரச்சனையாகவே இருந்து வந்துள்ளது.சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமான பாகிஸ்தான் நடிகை குவான் டீல் பலோச்சை அவரது சகோதரர் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.தன்னுடைய சொந்த கலச்சாரத்துக்கு எதிராக செயல்படுகிறார்கள், நடந்துகொள்கிறார்க என்ற காரணத்தை முன் வைத்து இந்த கொலைகள் நிகத்தப்படுகின்றன.

இந்நிலையில், ஆணவ கொலைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் தேசிய சபையில் ஒருமனதாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொலையானவரின் உறவினரே கொலையாளியை மன்னித்தாலும் ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக பாகிஸ்தானில் பெண்கள் இந்த கொலைகளுக்கு பல்வேறு ஆண்டுகளாக பலிகடா ஆகி வருகின்றனர். இதனால் தங்களது உரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் அவர்களுக்கு இந்த சட்டம் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.