யோஷிதவுக்கு சொந்தமான பல கோடி பெறுமதியான மற்றுமொரு காணி நிதி மோசடி விசாரணை பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முறையற்ற வகையில் காணி அபகரிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் யோஷித மற்றும் அவரது பாட்டி பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள தகவல்களுக்கமைய இந்த காணி யோஷிதவின் பாட்டி என கூறப்படும் டேசி பொரஸ்டின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் எதுவும் தெரியாதென பாட்டி குறிப்பிட்டுள்ளார்.
காணி பதிவு பத்திரத்தில் எழுதுவதற்காக வந்த உரிமையாளர் என கூறப்படும் நபர், இந்த காணிக்காக யோஷித ராஜபக்சவினால் 26,000,000.00 ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனினும் அவ்வாறான எந்தவொரு பணத்தையும் தான் வழங்கவில்லை என யோஷித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதற்கமைய சிறிமல் உயன, சமன் மாவத்தை, கெகட்டிய பிரதேசம் என்ற விலாசத்தில் உள்ள இந்த காணி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே நேற்றைய தினம் யோஷித ராஜபக்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.