மாணவர்களுக்கு தண்டனை வழங்கக்கூடிய உரிமை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் – மஹிந்த

237 0

மாணவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் தண்டனை வழங்கக்கூடிய சுதந்திரமும் உரிமையும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இல்லாது விட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகிவிடுமென எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் எம்.பி.யுமான அமர மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கல்வி அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியவற்றின் மீதான நீதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், 

நாட்டின் கல்விக்கான தேசிய கொள்கை ஒன்று இதுவரை முன்வைக்கப்படாதது மிகப்பெரும் தவறு. அரசு மாறினாலும் கல்வி அமைச்சர்கள் மாறினாலும் மாறாத தேசிய  கல்விக்கொள்கை ஒன்றே நாட்டுக்குத் தேவை. முதலாம் ஆண்டு தொடக்கம் பல்கலைக்கழகம் வரை இலவசமாக கல்வி கற்றுவிட்டு இறுதியில் வீதிகளில் நின்று மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில்தான் ஈடுபடுகின்றனர்.

இது கல்விக்கொள்கையில் உள்ள தவறினாலேயே இடம்பெறுகின்றது. அரச,தனியார் துறைகளில் பல வெற்றிடங்கள் இருந்தும் வேலையில்லாப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கும்  தேசிய கல்விக்கொள்கை இல்லாமையே காரணம் என்றார்.