யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி வீதியில் உள்ள விடோன்றின் மீது இன்று அதிகாலை துப்பாக்கிச் கூட்டு நடாத்தப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது:-
குறித்த பகுதியில் உள்ள வீட்டிற்கு நேற்று மாலை சிவில் உடை அணிந்த பொலிஸார் வந்துள்ளனர். அங்கு வந்த பொலிஸார் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு சோதணை செய்துள்ளனர்.
சோதணை செய்த பொலிஸார் குறித்த வீட்;டில் வசித்துவரும் அசோக் என்பவரை எங்கே என கேட்டு வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.
இதன் பின்னர் வீட்டில் இருந்த அசோக்கின் புகைப்படம் ஒன்றினை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய பொலிஸார், நாளை அசோக்கின் சடலம் பொலிஸ் நிலையத்திற்கு வரும், அவருடைய பிறப்பத்தாட்சி பத்திரத்தை காண்பித்து அவருடைய சடலத்தினை பெற்றுச் செல்லுங்கள் என்றும் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
பொலிஸாருடைய அச்சுறுத்தலினால் பயந்த குறித்த குடும்பத்தினர் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு சென்று தமக்கு பொலிஸாரினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று கூறி பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடு ஒன்றிணை பதிவு செய்துள்ளானர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் வாகனத்தில் வந்திறங்கியவர்கள் வீட்;டின் மீது துப்பாக்கிச் சூடு நடாத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்னர்.
இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் துப்பாக்கி ரவையில் வெற்று கோதுகளை அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.
இருப்பினும் குறித்த சம்பவ இடத்திற்கு தடவியர் பகுப்பாய்வுகளை மேற்கொள்ளும் பொலிஸார் பின்னரே வந்து சாட்டுப் போக்கிற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.