வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்

603 0

201606280826422043_Flood-affected-small-and-medium-enterprises-can-apply-to-get_SECVPFவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் வணிகத்துறையிடமிருந்து நிவாரணங்களை பெற அணுகலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட காலக்கடன் மீதான வட்டித்தொகையில் 3 சதவீதம் வட்டி மானியம், ஒரு ஆண்டுக்கு வழங்கப்படும். இதற்கான கேட்பு முறையின்படி, 30.6.2016 முடியும் இந்த காலாண்டுக்குரிய கேட்பு 31.7.2016 தேதிக்குள் வங்கிகள் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். அடுத்து அடுத்த கேட்புகள் தொடர்பாக, ஒவ்வொரு காலாண்டு முடிந்தவுடன் ஒரு மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வங்கியில் காலக்கடனை மாற்றியமைப்பதற்கும்; புதிய கடன்களை பெறுவதற்கும் தங்களது சொத்துகளை பிணையம் செய்து அடமான பத்திரங்களை பதிவு செய்யும் போது, அதற்குரிய முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டண செலவினம் முழுவதும் அரசால் திரும்ப வழங்கப்படும்.இதுதொடர்பாக அரசு ஆணை பிறப்பிக்கப்பட்ட நாள் அல்லது பதிவு செய்த நாள் ஆகியவற்றில் எது பிந்தையதோ, அந்த தினத்தில் இருந்து மூன்று மாதத்திற்குள் நிவாரணத்துக்காக விண்ணப்பிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள் அல்லது மண்டல இணை இயக்குனர் சென்னை ஆகியோரிடம் இதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment