கிளிநொச்சி இரும்புச் சங்கிலித் தாக்குதல் விவகாரம் பொலிஸாரிடம் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

321 0

fotorcreated-441கிளிநொச்சி ஏ-9 வீதியில் வைத்து இரும்பு சங்கிலியால் சாரதியை தாக்கி படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு பொது முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இதன்படி குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விளக்கத்தினை வழங்குமாறும் கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார்.
கடந்த செம்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி கிளிநொச்சி ஏ-9 வீதியால் சென்று கொண்டிருந்த உழவு இயந்திர சாரதிக்கும், மற்றுமொரு வாகன சாரதிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.
இம் முரண்பாட்டினை அடுத்து இருவரும் வீதியில் நின்று கொண்டு கருத்து மோதல்களில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நிலமையினை சுமூகமாக்குவதற்க கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சம்பவ இடத்திற்க வருகைதந்திருந்தனர்.
நிலமையினை சுமூகப்படுத்துவதற்காக அங்கு வந்த போக்குவரத்து பொலிஸார் கனதியான இறுப்பு சங்கிலி ஒன்றினால் உழவு இயந்திரத்தின் சாரதியை தலையில் தாக்கியிருந்தார்.
இதனால் படுகாயமடைந்த சாரதி கிளிநொச்சி வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததார்.
இச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தியினை கொண்டும், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்ட வீடியோப் பதிவுகளையும் ஆதாரமாக கொண்டு இச் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தினல் பொது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த சம்பவம் தொடர்பான உரிய விளக்கத்தினை வழங்குமாறு கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் விளக்கம் கொடுப்பதற்காக கிளிநொச்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை எதிர்வரும் 10 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்மையும் குறிப்பிடத்தக்கது.