பாடசாலை மாணவர்களுக்காக 100 பஸ்கள் சேவையில் இணைப்பு

359 0

பாடசாலை மாணவர்களின் பயணத்தை இலகு படுத்துவதற்காக “சிசுசேரிய” சேவைக்காக  100 பஸ்களை இவ்வாண்டு இணைப்பதற்கு தீர்மானித்திருப்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜானக மல்லிகாரச்சி தெரிவித்துள்ளார். 

பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் தற்போது 1,400 பஸ்கள் சேவைக்காக வரையறுக்ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், பாடசாலை மாணவர்களுக்கு நல்ல சேவை வழங்குவதற்காக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க 2019 ஆம் ஆண்டு  சிசு சேரிய, நிசிசேரிய, கேமிசேரிய ஆகிய பஸ் சேவைகளை விஸ்தரிப்பதற்காக  சுமார் 700 மில்லியன் ரூபாவை நிதிஅமைச்சரிடம் கேட்டுள்ளார். 

குறித்த பணம் கிடைத்ததும் தாமதமின்றி நடவடிக்கையை துரிதமாக செயற்படுத்துவோம் என ஜானக மல்லிகாரச்சி  தெரிவித்துள்ளார்.