ஹட்டன் டிக்கோயா நகர சபையினால், ஹட்டன் பேருந்து தரிப்பிடத்திற்கு பின்பகுதியில் உள்ள மலசல கூடத்திற்கு அருகாமையில் குழியொன்று தோன்டி கொண்டிருந்த போது ரிவோல்வர் ஒன்று மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்னர்.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஹட்டன் தனியார் பேருந்து தரிப்பிடத்திற்கு பின்னால் குழியொன்று தோன்டி கொண்டிருந்த போது, மண்ணில் புதையுண்டு காணபட்ட ரிவோல்வரை கண்ட ஊழியர்கள் ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஹட்டன் பொலிஸார் குறித்த ரிவோல்வரை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட ரிவோல்வர் நீண்டகாலம் பழமை வாய்ந்ததாகவும் துருபிடித்து காணப்பட்டதாகவும் குறித்த ரிவோல்வரில் உள்ள இலக்கங்கள் அனைத்தும் அழிந்த நிலையிலே மீட்கபட்டுள்ளது.
ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.