கிழக்கு தொடர்பில் விசேட கவனம் தேவை – விஜயகலா

265 0

இந்த ஆட்சிக்காலம் முடிய முன்னர் வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான வீடுகளை பெற்றுகொடுத்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என  ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். 

வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரச்சினையை தீர்ப்பதற்கு  தொடர்ந்து நவடிக்கை எடுக்கவும் அதற்கு தேவையான வளங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

வடக்கு கிழக்கு பிரதேசங்களை மீள் கட்டியெழுப்ப கடந்த காலத்தில் பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன. எனினும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. ஆகவே  வடக்கு கிழக்கு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.. 

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற பிரதமரின் தேசிய கொள்கைகள்,பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி, இளைஞர் அலுவல்கள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.