இரண்டாம் வாக்கெடுப்பில் சுதந்திர கட்சியின் செயற்பாடுகள் கவலைக்குரியது -ரஞ்சித் சொய்ஷா

290 0

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவு திட்டத்தின் மீதான இரண்டாம் வாக்கெடுப்பின் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி செயற்பட்ட விதம் கவலைக்குரியது. என ரஞ்சித் சொய்ஷா தெரிவித்தார்.

அத்தோடு ஜனாதிபதி வேட்பாளர் சுதந்திர கட்சியினராக வேண்டும் என்று அக்கட்சியினர் குறிப்பிடுகின்றனர். ஆனால் நாட்டு மக்கள் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஜனாதிபதியாக வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்கள். மக்களின் தீர்ப்பே வெற்றிப் பெறும் என ரஞ்சித் சொய்ஷா தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு  கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

. வரவு – செலவு திட்டத்தின் மீதான இரண்டாம் வாக்கெடுப்பு  இடம் பெறும் போது எவ்வாநான விடயங்களை முன்னிலைப்படுத்தி எதிர்ப்புகளை தெரிவிக்க வேண்டும் என்று கடந்த 11 நாட்களாக முக்கிய கலந்துரையாடல்கள் இடம் பெற்றது.எமது தரப்பினர் முறையாகவே செயற்பட்டோம்.

வரவு- செலவு திட்டத்தின் மீதான இரண்டாம் வாக்கெடுப்பின் பொழுது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் செயற்பட்ட விதம் பொருத்தமற்றதாக காணப்படுகின்றது வாக்கெடுப்பிற்கு கலந்துக் கொள்ளாமல் இருந்தமை சுதந்திர கட்சியின் கட்சி சார் தீர்மானமாகும். இருப்பினும் அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து வரவு – செலவு திட்டத்திற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்திருந்தால். அது அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தியிருக்கும்.

பொதுஜன பெரமுனவிற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது. தேர்தலின் ஊடாக நாங்கள் வெற்றிப் பெறுவோம் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது என்றார்.