அன்டோனியோ கட்டெரெஸ்-ஐ.நா. பொதுச் செயலாளர் ஆகிறார்

341 0

201610052308197628_security-council-says-antonio-guterres-is-clear-favourite_secvpfஐ.நா. சபையின் தற்போதைய பொதுச் செயலாளராக பான்-கி-மூன் உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் பான் கி மூன் பதவிக் காலம் முடிவடைய இருப்பதால் ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், ஐ.நா. சபையின் அடுத்த பொதுச் செயலாளராக போர்ச்சுகீசிய முன்னாள் பிரதமர் அன்டோனியோ கட்டெரெஸை தேர்வு செய்ய பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் குட்டெரெஸை தேர்வு செய்ய ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது.

முன்னதாக ஐ.நா. சபையின் புதிய பொதுச் செயலாளர் ஒரு பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வந்தன. பான் -கி-மூன் உள்ளிட்டன பலரும் அதற்கு ஆதரவு இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு ஆண் ஐ.நா. சபையின் அடுத்த பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்டோனியோ கட்டெரெஸ் பற்றிய விவரம் பின்வருமாறு:-

• 1949ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 தேதி போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் பிறந்தார் அன்டோனியோ குட்டெரெஸ். 66 வயதான இவருக்கு கத்திரினா வாஸ் பின்டோ என்ற மனைவி இருக்கிறார்.

• 1974ம் ஆண்டு சோஷலிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வதன் மூலம் அரசியல் உலகில் காலடி பதித்த இவர், கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணி புரிந்தார்.

• 1995ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து போர்ச்சுகீசிய நாட்டின் 114வது பிரதமராக பொறுப்பேற்றார்.

• 1999ம் ஆண்டு 2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் அன்டோனியோ குட்டெரெஸ்,

• 2000ம் ஆண்டு ஐரோப்பிய கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை வகித்தார்.

• 2005ம் ஆண்டு ஐ.நா. அகதிகள் நல ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். அகதிகள் குறித்தான பல்வேறு சீர்திருந்தங்கள் அவருடைய காலத்தில் உருவாக்கப்பட்டன.

• முன்னதாக, 1991ல் போர்ச்சுகீசிய அகதிகள் கவுன்சிலை தொடங்கி அகதிகளுக்கான பணிகளை செய்து வந்தார்.