இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா உற்பத்திகளுக்கு விலை சூத்திரம் ஒன்றை அறிமுகம் செய்யும் ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த ஆலோசனையை அமைச்சர் பீ.ஹெரிசன் அமைச்சரவைக்கு முன்வைத்துள்ளார்.
அத்தோடு இதன் மூலம் சர்வதேச சந்தையில் விலை மற்றும் நாணய பரிமாற்ற விகிதத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு,நுகர்வோர், அரசாங்கம் மற்றும் பால்மா உற்பத்தியாளர்களிற்கு சாதகமான முறையில் விலை தீர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.