அநுராதபுரம் மாவட்டத்தில் நிலைபேறான விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் முறையான நீர்வழங்கலை உருவாக்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் 16 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளது.
இதற்கான இருதரப்பு ஒப்பந்தமானது இன்று இலங்கைக்கான ஜப்பானிய தூதுவரின் இல்லத்தில் வைத்து இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிர சுகியமா மற்றும் சேவாலங்கா அமைப்பின் தலைவர் ஹர்ஷ குமார நவரத்ன ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.