பாரீஸ் சுற்றுச்சூழல் மாறுபாடு ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்: ஐ.நா

326 0

201610060700006865_paris-climate-pact-to-enter-into-force-in-30-days-un_secvpfஇன்னும் 30 நாட்களில் பாரீஸ் சுற்றுச்சூழல் மாறுபாடு ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று ஐ.நா சபை அறிவித்துள்ளது.

சுற்றுச் சூழல் மாசுபாடு தொடர்பாக ஐ.நா. சபையில் உள்ள நாடுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாரிஸ் நகரில் ஒன்று கூடி ஒருமனதாக வரைவு ஒப்பந்தம் ஒன்றினை உருவாக்கினர்.

இந்த பாரீஸ் சுற்றுச்சூழல் மாறுபாடு ஒப்பந்தத்திற்கு பல்வேறு நாடுகளும் தொடர்ச்சியாக ஒப்புதல் அளித்த வண்ணம் இருந்தன. இந்தியாவும் கடந்த காந்தி ஜெயந்தி தினத்தன்று ஒப்புதல் ஆவணங்களை ஐ.நாவிடம் அளித்தது.

இந்நிலையில், இன்னும் 30 நாட்களில் பாரீஸ் சுற்றுச்சூழல் மாறுபாடு ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று ஐ.நா சபை அறிவித்துள்ளது.

இதுவரை 72 நாடுகள் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளன. பசுமை வாயு வெளியிடும் நாடுகளில் 56 சதவீதத்திற்கும் மேலாக ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக ஐ.நா. பருவநிலை மையம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஐரோப்பியன் யூனியன் ஒரே அமைப்பாக நேற்று  பாரீஸ் சுற்றுச்சூழல் மாறுபாடு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.

இது குறித்து பிரான்ஸ் சுற்றுச் சூழல் மந்திரி சிகோலென் ராயல் கூறுகையில், “ஐரோப்பியன் யூனியன் நாடுகள் ஏற்கனவே இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது அதற்கான ஆவணங்களை ஐ.நா.விடம் தாக்கல் செய்துள்ளது”என்று தெரிவித்தார்.