கண்டியிலிருந்து மொனராகல நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பஸ் ஒன்று தெல்தெனிய பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, 11 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமைடந்த நபர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாவுள்ள நிலையில் அவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற போது பஸ்ஸில் 60 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.Share