சென்னை ரெயில் கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை

307 0

201610060821498269_cbcid-police-information-chennai-train-robbery-accused-still_secvpfசென்னையில் நடந்த ரெயில் கொள்ளை வழக்கில் மும்பையில் தனிப்படை போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றும், குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.

சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில், ரெயில் பெட்டியின் மேற்கூரையை துவாரமிட்டு ரூ.5.75 கோடி வங்கிப்பணம் கடந்த ஆகஸ்டு மாதம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகள் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று நேற்று மாலை தகவல் பரவியது. ‘வாட்ஸ்-அப்’பிலும் தகவல் வெளியானது.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வாலிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் வருமாறு:-

ரெயில் கொள்ளை வழக்கில், இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் மும்பையில் முகாமிட்டு சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என்று சந்தேகப்படும் நபர்களின், சி.சி.டி.வி. கேமராவில் பதிவான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் யார் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.