பகடையாக ஆசிரிய, அதிபர்கள் – கல்வி அமைச்சு

297 0

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை பகடையாக பயன்படுத்தி குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு சில தொழிற்சங்கங்கள் கொண்டு செல்லும் வேலைத்திட்டம் தொடர்பில் மக்கள் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 

சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய அரசதுறை சம்பள கலந்தாய்வுக்கான விசேட ஆணைக்குழுவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு விரைவில் சாதகமான தீர்வு கிடைக்கும்.

சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு அனைத்தும் தயாராக உள்ள நிலையில், அதனை தமது சங்கங்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியென காண்பித்து ஆசிரியரகள் மற்றும் அதிபர்களின் கவனத்தை திசைத்திருப்புவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாகவும் கல்வியமைச்சு  மேலும் குறிப்பிட்டுள்ளது.