உள்ளக பிரச்சினைக்காக சர்வதேசத்தை நாட அவசியமில்லை-ஹர்ஷன ராஜகருண

280 0

நாட்டின் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேசத்தின்  உதவியை நாட வேண்டிய அவசியம் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி  இராணுவத்தினருக்கு எதிராக செயற்படுகின்றது என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது. 

கடந்த அரசாங்கத்தில் இராணுவத்தினரும், பொலிஸ் பிரிவினரும் எவ்வாறு அரசியல்வாதிகளினால் நடத்தப்பட்டார்கள் என்பது  அனைத்து மக்களும் நன்கு  அறிவார்கள். மேலும் தமது அரசியல் பிரச்சாரத்திற்காக இராணுவத்தினரை பகடைகாயாக  பயப்டுத்திக் கொள்வதை  எதிர்தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.