புதிய பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக சுதந்திரக்கட்சி வாக்களிக்கும் – தயாசிறி

294 0

இலங்கை தொடர்பான விவகாரங்களிற்கு நீதித்துறையை பயன்படுத்தி  உள்நாட்டில் தீர்வை காண்பதற்கு பதில் அரசாங்கம் அந்த நடவடிக்கையை வெளிநாடுகளிடமும் சர்வதேச சமூகத்திடமும் ஒப்படைக்கின்றது என  பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுசெயலாளருமான தயாசிறிஜயசேகர தெரிவித்துள்ளார்

இலங்கை விவகாரத்தை பல கட்சிகள் சர்வதேசமயப்படுத்தியுள்ளன என தெரிவித்துள்ள தயாசிறிஜயசேக அரசாங்கம் ஒருபடி மேல் சென்று ஐநா தீர்மானத்திற்கு இணை அனுசரணை வணங்கியுள்ளது இதன் காரணமாக தீர்மானத்pல் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றவேண்டிய நிலையிலுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்

சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து அரசாங்கத்தினால் விடுபடமுடியாநிலை காணப்படுகின்றது என  தெரிவித்துள்ள அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இலங்கை விவகாரத்தில் தலையிடுவது அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் இந்த நாட்டின் மக்களுடையதில்லை  என தெரிவித்துள்ள அவர்இந்த அரசாங்கம் ஏனைய நாடுகளின் விருப்பத்திற்கு ஏற்பவே செயற்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு அரசாங்கம் கொண்டுவரவுள்ள உத்தேச புதிய பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வாக்களிக்கும் எனவும் தயாசிறிஜயசேகர தெரிவித்துள்ளார்

நாட்டின் ஜனநாயக உரிமைகளை அழிக்கும் நோக்கத்துடனேயே புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்