கொழும்பு – மாலபே கடுகதி ரயில் சேவை!

297 0

கொழும்பு – கோட்டைக்கும் மாலேபேக்குமிடையில் குறுந்தூர கடுகதி ரயில் சேவைக்கான புதிய பாதையை நிர்மாணிப்பதற்கான கடன் ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது.

ஜப்பான் நட்புறவு நிதியத்துடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக மாநாகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த ரயில் பாதை நிர்மாணப் பணிகளை நான்கரை வருடங்களில் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆறு நிமிடங்களுக்கு ஒரு தடவை இந்த ரயில் பாதையில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

இந்த ரயில் பாதை பகுதியில் 17 ரயில் நிலையங்கள் நிர்மாணக்கித் திட்டமிடப்பட்டுள்ளது. 23 நிமிடங்களில் பயணம் செய்யும் வகையில் இந்த புதிய திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.