புற்றுநோய் வைத்திய சாலை அமைப்பதற்கான நடைபவனி நாளை யாழில் ஆரம்பம்

365 0

dsc_0425ட்ராய்ல் Trail அமைப்பின் ஏற்பாட்டில் கராப்பிட்டியவில் சிறுவர்களுக்கான புற்றுநோய் சிகிச்சை பிரிவொன்றிணை அமைப்பதற்கான நிதி திரட்டும் நோக்கில் வடக்கில் இருந்து தெற்கிற்கான நடைபவனி நாளை பருத்தித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது என்று உத்தியோக பூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை தெல்லிப்பளை புற்றுநோய் வைத்திய சாலையில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இச் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்த ட்ராய்ல் வுசயடை அமைப்பினாலேயே மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ் நடைபவனியில் இலங்கை கிரிக்கெட் அணியில் முன்னாள் அணித்தலைவர்களான குமார் சங்ககார, மகேலஜேயவர்த்தன மற்றும் பொலிவூட் நட்சத்திரம் ஜாக்குpலன் பெர்னாண்டஸ், பொப் பாடகர்களான பாத்தியா, சந்தூஷ், தொழில் முயட்சியாளர் ஒட்டாரா டி ஆகியோரும் இணைந்து கொள்ளவுள்ளனர்.
28 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இவ் நடைபவனி நாளை பருத்தித்துறையில் ஆரம்பிக்கும் இவ் நடைபவனி வல்வை, யாழ்.துரையப்பா, கொடிகாமம், மாங்குளம், மதவாச்சி, கல்முனை, குருணாகல், கொச்சிக்கடை, கொழும்பு, பாணாந்துறை மற்றும் சீனிகம போன்ற நகரங்களை கடந்து செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.