இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியாவுக்கு செல்லும் அமெரிக்கர்கள் காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா அறிவுரை கூறியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியாவுக்கு செல்லும் அமெரிக்கர்கள் காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா அறிவுரை கூறியுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பு தலைவர் ஸ்டீவ் ஹெர்மன் கூறியதாவது:-
பயங்கரவாதமும், பதற்றமும் நிலவுவதால், காஷ்மீருக்கு செல்ல வேண்டாம். பயங்கரவாதிகள் எவ்வித எச்சரிக்கையும் விடுக்காமல் சுற்றுலா தலங்கள், பஸ், ரெயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், அரசு கட்டிடங்கள் ஆகியவற்றை குறிவைத்து தாக்கக்கூடும். ஆயுத மோதல் நடக்க வாய்ப்பு இருப்பதால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கி.மீ. தூரத்துக்குள் எங்கும் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.