பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்-நளிந்த

263 0

பங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். ஆனால் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல யோசனையை ஏற்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

பயங்கரவாத  தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற  நிலைப்பாட்டிலே மக்கள் விடுதலை முன்னணியினர்  உள்ளோம். இவ்விடயத்தில் அரசியல் விடயங்களை மையப்படுத்தி தீர்மானங்களை முன்னெடுக்க முடியாது.  இன்றும் பயங்கரவாத தடைச்சட்டம் இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் ஒரு ஏற்பாடாகவே காணப்படுகின்றது. ஆகவே பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுவதற்கு நாங்கள் முழுமையான ஆதரவு வழங்குவோம்.

பயங்கரவாத   தடைச்சட்டத்திற்கு பதிலாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ளடக்கியுள்ள விடயங்கள் தொழில் துறையினரது உரிமைகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும். 

ஆகவே  தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினை விட புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பாரதூரமானது என்றார்.