நாட்டு மக்கள் விரும்பி அரசாங்கம் ஒன்றை அமைக்கும் வரையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொறுத்திருக்க வேண்டி வரும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வத்தளை ஹுணுப்பிட்டிய பிரதேசத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அரசியலமைப்புக்கு முரணான முறையில் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்த போதிலும், அது அவருக்கு கைகூடவில்லையெனவும் பொன்சேகா எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.