பேர்லினில் தமிழின அழிப்பு கண்காட்சி

359 0

யேர்மனி , பேர்லின்   மாநிலத்தில் நடைபெறும் உலகளாவிய மிகப் பெரிய உல்லாசப் பயணிகளுக்கான கண்காட்சி 2019 இல் சிறிலங்கா இனவெறி அரசும் இணைந்துள்ளது .இதை கண்டித்தும் , சிங்கள பேரினவாத அரசின் உண்மை முகத்தை பல்லின சமூகத்திற்கு எடுத்துரைக்கவும் இன்றும் நாளையும் தமிழின அழிப்பு கண்காட்சி நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டது. 
இன்றைய நாளில் தமிழின அழிப்பு கண்காட்சி பார்வைக்கு வைக்கப்பட்ட  நிலையில் கடுமையான காற்று தொடர்ச்சியாக வீசியதால் கண்காட்சி  வீழ்ந்து  கிடப்பதும் அத்தோடு   அதனால் அங்கு நடமாடும் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதாலும் காவல் துறையால் இடைநிறுத்த கோரப்பட்டது. 
அத்தோடு கண்காட்சிக்கு பயன்படுத்தப்பட்ட   இரும்பு கம்பிகள் சரிந்து விழுந்ததும் மற்றும் கற்கள் உடைந்து போனதும் குறிப்பிடத்தக்கது. 
அந்தவகையில் நாளைய தினமும் கடுமையான காற்று வீசும்  அபாயம் இருப்பதனால் அறிவிக்கப்பட்ட நிகழ்வு ரத்துசெய்யப்பட்டுள்ளது என்பதையும் இத்துடன் அறிவிக்கின்றோம் . இருப்பினும் தலைநகரத்தில்  ஈழத்தமிழ் மக்கள் ஆகிய நாம் சிங்கள இனவெறி அரசின் பொய் முகத்தை கிழித்தெறிந்து எங்கள் தாயக மக்களின் அவலத்தையும் எம் மீது மேற்கொண்ட இன அழிப்பையும் பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் முயற்சியை கைவிடமாட்டோம் என்பதையும் இத்துடன் உறுதிப்படுத்துகின்றோம்.