பயங்கரவாத தடை சட்டத்திற்கு மாற்றீடான சட்டம் தொடர்பில் அச்சம் -சுமந்திரன்

298 0

sumanthiran034sபயங்கரவாத தடை சட்டத்துக்கு பதிலாக முன்வைக்கப்படவுள்ள சட்டம், மேலும் பாரதூரமான இருக்கும் என்ற சந்தேகத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

நீதிமன்ற குற்றவியல் சட்டம் தொடர்பான விவாதம் நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்றது.

இதில் கருத்து வெளியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த கருத்தைக் கூறினார்.

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி, அதற்கு பதிலாக புதிய சட்ட ஒன்றை அமுலாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக குழு ஒன்று உருவாக்கப்பட்டு, அந்த குழு தம்முடனும் கலந்துரையாடி, புதிய வரைவு ஒன்றை உருவாக்கியது.

எனினும் தமக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி, இந்த வரைவு குப்பையில் எறியப்பட்டு, பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த சிலரால் மற்றுமொரு சட்ட வரைவு உருவாக்கப்பட்டுள்ளது.

இது தற்போதுள்ள பயங்கரவாத தடை சட்டத்தைக் காட்டிலும் பாரதூரமானமாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் உண்மையாக இருந்தால், அது அரசாங்கத்துக்கு மிகப்பெரிய அவப்பெயராக இருக்கும் என்று சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.