20 ஆவது அரசியலமைப்பினை நிறைவேற்றித்தான் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமைத்துவத்தினை பெற வேண்டிய அவசியம் கிடையாது. தேர்தலின் ஊடாக நாட்டு மக்களே ஆட்சியதிகாரத்தை மீண்டும் ஒப்படைப்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரத்தை இரத்து செய்ய வேண்டுமாயின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம், தேர்தல் முறைமை போன்ற விடயங்களையும் பரிசீலனை செய்ய வேண்டும். அதற்கான காலவகாசமும் தற்போது போதாது.
ஆகவே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஒருபோதும் நிறைவேறாது என்ற விடயத்தில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என்றார்.