புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் விதிகள், பயங்கரவாத தடைச்சட்டத்தை விடவும் மோசமாக அமையலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கவலை வெளியிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றைக் கொண்டுவரப்போவதாக அண்மையில் நியூசிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டபோது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
இது குறித்தது புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் பயங்கரவாதத்துக்கு எதிராக தீவிரவாத முடியடிப்புச் சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், புதிதாகக் கொண்டு வரப்படவுள்ள சட்டம் பயங்கரவாத தடைச்சட்டத்தை விடவும் மோசமானதாக இருக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளார்.