யாழில் கேரளா கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது!

291 0

201609180153072508_8-is-militants-arrested-in-pakistan_secvpfயாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் வீதியில் நேற்று (4) இரவு 1 கிலோ 900 கிராம் மதிக்கத்தக்க கேரளா கஞ்சாவுடன் இருந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த நபர் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் என்றும், அவர் மடத்தடி வீதியில் திருமணம் செய்து இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையிலான பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த நபர் வீதியில் நின்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை விசாரணையின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.