மேலாண்மை வாரியம் அமைக்ககோரி கடலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

322 0

201610051011023973_30-people-arrested-farmers-struggle-demanding-set-cauvery_secvpfகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி கடலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்: 30 பேர் கைது.காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டதை கண்டித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நாகை புதிய கடற்கரையில் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட விவசாயிகள் உடல் மற்றும் நெற்றியில் பட்டை நாமம் போட்டியிருந்தனர். போராட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.

கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இது குறித்து தகவல் அறிந்த நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பு, வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதே போல நாகையை அடுத்த ஆயக்காரன்புலத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.