கடத்தப்பட்ட செஞ்சிலுவை சங்க பெண் ஊழியர் 10 மாதங்களுக்கு பிறகு விடுவிப்பு

283 0

201610050813586187_red-cross-says-female-french-hostage-released-in-yemen_secvpfஏமனில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட செஞ்சிலுவை சங்க பெண் ஊழியர் 10 மாதங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏமன் நாட்டில் உள்நாட்டு போரால் அங்கு வசிக்கும் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். கடந்த 2015-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஓமன் சர்வதேச செஞ்சிலுவை சங்க பெண் ஊழியர் நாரன் ஹவாஸ், ஏமன் நாட்டின் சனா நகருக்கு சக ஊழியர்களுடன் சென்று அங்கு நிவாரணப்பணிகளை வழங்க சென்றார். 2015-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி பயங்கரவாதிகள் சிலர் நாரன் ஹவாஸை துப்பாக்கி முனையில் காரில் கடத்தி சென்றனர். 5 மாதங்கள் கழித்து துப்பாக்கி முனையில் நாரன் ஹவாஸ் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பயங்கரவாதிகள் வெளியிட்டனர்.

இதைத்தொடர்ந்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர், ஏமன் அரசு மூலம் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 39 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோ காட்சியை பயங்கரவாதிகள் வெளியிட்டனர். அதில் நாரன் ஹவாஸ் தன்னை எப்படியாவது விடுவித்து அழைத்து செல்லும்படி உருக்கமாக பேசிய காட்சி இடம் பெற்றிருந்தது.

ஓமன் மன்னர் மேதகு சுல்தான் காபூஸ் சேட் அல் சேட் உத்தரவின்பேரில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தனி மீட்புகுழுவினர் ஏமனுக்கு சென்று நாரன் ஹவாஸ் கடத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டுபிடித்தனர். மீட்பு குழுவினர் வருகையை அறிந்ததும் பயங்கரவாதிகள், நாரன் ஹவாஸை முன்கூட்டியே விடுவித்தனர். இதையடுத்து ஓமன் வெளியுறவுத்துறை அதிகாரிகள் நாரன் ஹவாஸை தனி விமானம் மூலம் மஸ்கட் அழைத்து வந்தனர்.