மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் சவுக்கடி கடற்கரை பகுதியில் அண்மையில் எலு ம்பு எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் தொடா்ந்தும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட் டு வருவதாக பொலிஸாா் தொிவித்துள்ளனா்.
சவுக்கடி பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அமைக்கப்பட்டு வரும் வீட்டு திட்டத்திலுள்ள ஒருவர் தனது காணியில் சிறிய கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில் கிணறு ஒன்றை அகழும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது மனித எச்ச ங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை 5 மணியளவில் சம்பவ இடத்திற்கு
வருகை தந்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் விசாரனைகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து நீதிவானின் உத்தரவிற்கு அமை வாக குறித்த இடம் மேலும் அகழப்பட்ட போது
மேலும் சில மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் அத்துடன் அகழ்வு பணிகள் நிறைவுக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குழியிலிருந்து மனித மண்டை ஓட்டின் பகுதிகளும், எலும்புகளுமே மீட்கப்பட்டுள்ளன.
மேலும், நீதிபதியின் உத்தரவிற்கு அமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை யின் சட்ட வைத்திய அதிகாரி மனித எச்சங்களை பகுப்பாய்வு செய்வதற்காக கொ ண்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.