பாராளுமன்றத்தின் பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் கிடையாது எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி, நல்லாட்சி அரசாங்கத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய பிறகே தேர்தலுக்கு செல்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயமான சிறிகொத்தாவில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும்போதே நளின் பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிலையான அரசாங்கத்தை அமைக்க வேண்டுமாயின் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளது பொருத்தமற்றதாகும்.
தற்போது நிலையான போட்டித் தன்மையற்ற அரசாங்கமே காணப்படுகின்றது. பாராளுமன்ற தேர்தலை தற்போது நடத்த வேண்டும் என்று குறிப்பிடுபவர்கள், பாராளுமன்ற கலைப்பிற்கு எதிரான உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.