நாட்டை கட்டிஎழுப்புவதே எனது நோக்கம்-சந்திரிக்கா

272 0

நல்லதொரு நாட்டைகட்டி எழுப்புவதற்கு தேசிய ஒருமைபாட்டிற்கும், நல்லிணக்கதிற்குமான அலுவலகம் முக்கிய பணியாற்றும் என அதன் பணிப்பாளரும் முன்னாள் அரச ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

வவுனியாவிற்கு நேற்றையதினம் விஜயம் செய்த அவர் நெடுங்கேணியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஐனாதிபதி மற்றும்  பிரதமர் ஆகியோர் இந்தநாட்டிலே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

தேசிய ஒருமைபாட்டிற்கும், நல்லிணக்கதிற்குமான  செயலகத்தின் மூலம் போரினால் இடம்பெயர்ந்த  மக்களின் காணிகள் மீளவும் வழங்குவதுடன், அங்கு வீடுகுளை அமைத்து அவர்கள் வாழ்வதற்கு வழியை ஏற்படுத்துவதற்கு பல  நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுவருவதுடன் அழிவடைந்த  வீதிகள்,கிராமங்கள்,பாடசாலைகளில் உட்கட்டமைப்புகளை வழங்குவதற்கும் நாம்  திட்டங்களை வகுத்துள்ளோம்.

வருமானத்தை பெருக்கி சுயதொழில் வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம்  நாட்டில் வாழும் அனைவரையும் ஒன்றாக்கி நல்லதொரு நாட்டைகட்டி எழுப்புவதற்கு தேசிய ஒருமைபாட்டிற்கும் நல்லிணக்கதிற்குமான அலுவலகம் முக்கிய செயலாற்றும்.

குறிப்பாக வடமாகாணத்தில் 43 கிராமங்களை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். அங்கு முழுமையான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம். இங்கு நீர் பிரச்சினை அதிகமாக  இருப்பதால் அதற்கு நாங்கள் முன்னுரிமை வழங்கியிருக்கிறோம்.

வடக்கில் போரின் பின்னர் பல தனியார் நிறுவனங்கள் சட்டவிரோதமான முறையிலே அதிகவட்டிவீதத்தில் கடன்களை வழங்கியிருக்கிறார்கள். இதனால் பல பெண்கள்மரணமடைந்திருக்கிறார்கள்.

எனவே குறைந்தவட்டி விகிதத்தில் நாங்கள் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். வருடவட்டி 6 வீதமாதாகவிருக்கிறது. அதில் 25 வீதத்தை தேசிய  நல்லிணக்கசெயலகம் வழங்கும். 

கடன்களை வழங்குவதற்காக அரசாங்க உத்தியோகத்தர்களை வங்கிகள்  பிணையாக கேட்கின்றன. அவ்வாறு  இல்லாமல் குறித்த கடன்தொகையை வழங்குவதற்கு விரைவில்  நடவடிக்கைள் எடுக்கபடும் என அவர் உறுதியளித்தார்.