காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு பிரதமரை சந்தித்து வலியுறுத்துவோம் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை சுப்ரீம் கோர்ட்டில் கூறியுள்ளது. இந்த பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரி உமாபாரதி ஆகியோரை சந்தித்து வலியுறுத்துவோம்.
உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போவதால் ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். இது குறித்து ஐகோர்ட்டை அணுக கட்சியினரிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.