ஒபாமாவின் மனைவியை கொரில்லா என வர்ணித்த ஆசிரியை நீக்கம்

321 0

201610051116408813_teacher-aide-in-georgia-fired-over-racist-facebook-posts_secvpfஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமாவை கொரில்லா குரங்கு என வர்ணித்த பள்ளி ஆசிரியை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஜார்ஜியா பகுதியில் அமைந்துள்ள ஒருபள்ளியில் ஆசிரியையாக இருப்பவர் ஜேன் உட் அல்லன். இவர்  கடந்த 1989-ம் ஆண்டில் இருந்தே இந்த பள்ளியின் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் மிச்செல் ஒபாமாவை கொரில்லா என்று குறிப்பிட்டு வசைபாடியுள்ளார்.

இதுதொடர்பாக, அந்த ஆசிரியை வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், ’இந்த பாவப்பட்ட கொரில்லா, அதிபர் மாளிகையை விட்டு வெளியேறி, யதார்த்தமான உலகில் எப்படி வாழப்போகிறதோ…?

இனி, அவரது விடுமுறைக்கால உல்லாச சுற்றுலாகளுக்கு அரசுப்பணத்தை செலவிட முடியாது. உல்லாச சுற்றுலாகளுக்கு பதிலாக தனது அழகை (குறிப்பாக கூந்தல்) பாதுகாப்பதில் அவர் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்’ என குறிப்பிட்டிருந்தார்.

இதைதொடர்ந்து, இனவெறியுடன் கருத்து வெளியிட்டதாக கூறி பள்ளி நிர்வாகம் அவரை ஆசிரியை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.

இனவாதம் மற்றும் பாரபட்சத்தை ஒருபோதும் தங்கள் பள்ளி ஏற்றுக்கொள்ளாது என குறிப்பிட்ட நிர்வாகம் இது பள்ளியில் பணியாற்றும் எஞ்சியவர்களுக்கும் பொருந்தும் எனவும் எச்சரித்துள்ளது.