கூட்டமைப்பிலிருந்து டெலோ கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒருபிரிவினர் வெளியேறலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கூட்டமைப்பாகவே தற்போது செயற்பட்டு வருகிறதாக தமிழ் மக்கள் பார்க்கின்றனர்.
இந்தப் பயணத்தில் தொடர்ந்தும் நாங்கள் பயணிக்க முடியாது. எனவே கூட்டமைப்பு பயணிக்கின்ற பாதை சரி செய்யப்பட வேண்டுமென தாம் கோருவதாக” தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
“சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகள்; பௌத்த சிங்கள ஆதிக்கச் சிந்தனையில் இருந்து விடுபடத் தயாரில்லை என்றால் நாங்கள் மீண்டும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலே சுதந்திரத் தனித் தமிழீழக் கோரிக்கையை கையிலெடுப்பது பற்றி தீவிரமாகச் சிந்திக்க வேண்டி வரும்.அதனை நாங்களோ எமது மக்களோ இப்போது சிந்திக்கா விட்டாலும் அதிகார அரசியல் வெறி கொண்டு அலைகின்ற பௌத்த சிங்களப் பேரினவாதிகளும் தலைவர்களும் அதைத் தீர்மானிப்பார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.எனினும் டெலோவை கூட்டமைப்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கோடீஸ்வரன் ஆகியோர் ரணிலின் ஆதரவு பெற்ற செல்லப்பிள்ளைகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.