விசார் நாய் கடிக்கு முழுமையான தீர்வு-ராஜித

319 0

விசர் நாய் கடியால் ஏற்படும் மரணங்களை கட்டுப்படுத்த அசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. இந்நோயை கட்டுப்படுத்தும் வேலைத் திட்டத்தை மீண்டும் சுகாதார அமைச்சுக்கு கீழ் கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர்  ராஜித சேனாரத்ன  தெரிவித்தார்.

அத்துடன் 2025 ஆம் ஆண்டளவில் இலங்கையில் இந்த நோய் முற்றாக இல்லாதொழிக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவினால் நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் விசர் நாய் கடி நோய் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதை குறிப்பிட்டார்.