ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன இணைந்து அமைக்கவுள்ள கூட்டணி மற்றும் எதிர்வரும் தேர்தல்களுக்கு முகங்கொடுப்பது தொடர்பாக இம்மாதம் 14 ஆம் திகதி எதிர் கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷ தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.
இது தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் பொது செயலாளர் றோஹன லக்ஷ்மன் பியதாச மற்றும் நான் உள்ளிட்ட முவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.