ஹிருணிக்காவிற்கு எதிராக 26 வழக்குகள்

348 0

11b26ee0b67b101720f3e12cd445e528_xlநல்லாட்சி என்பது நாட்டில் அனைவருக்கும் பொதுவாகவே செயற்படுகின்றது வீணாக எவரும் குற்றம் சுமத்தவேண்டாம் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

வற்வரி தொடர்பிலான விவாதத்திற்காக இன்று பாராளுமன்றம் ஒன்று கூடியது. இதில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கடந்த காலங்களில் நீதிமன்றத்தில் இருக்கும் நீதிதேவதையை வீட்டிற்கு எடுத்துச்சென்றும், நீதியை தமக்கு ஏற்ற வகையில் மாற்றியும் முறைகேடான ஆட்சியை நடாத்தினார்கள். ஆனால் தற்போது அது முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது.

துமிந்த சில்வாவிற்கு எதிராக ஹிருணிக்கா பிரேமசந்திர வழக்கு தொடுத்தார் ஆனாலும் ஹிருணிக்காவிற்கு எதிராக 26க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணையில் உள்ளது. அதனை தொடர்ந்தது நல்லாட்சியே.

இது போன்று ஊழல் செய்பவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும், அவர்கள் நல்லாட்சிக்கு வேண்டியவர்களாக இருந்தாலும் வழக்குகள் தொடரப்பட்டு கொண்டு தான் இருக்கின்றது. இதன் மூலம் முறையான நல்லாட்சி நடக்கின்றது பக்கசார்பு இல்லை என்பது தெளிவாகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை நல்லாட்சியின் செயற்பாடுகள் காரணமாக ஊழல் செய்பவர்கள் நடுக்கத்தில் உள்ளார்கள், இதன் காரணமாக தற்போது ஊழல்கள் குறைவடைந்துள்ளது. இதுவே நல்லாட்சி எனவும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.