அமெரிக்காவில் நிரந்தர வதிவிட உரிமை (கிறீன் கார்ட்) வழங்குவதற்கு 50,000 பேரை தெரிவு செய்வதற்கு இணையத்தில் விண்ணப்பிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசு வருடாந்தம் பல நாடுகளை சேர்ந்த 50,000 பேரை லொத்தர் குலுக்கல் முறையில் தெரிவு செய்து நிரந்தர வதிவிட உரிமை வழங்கி வருகிறது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் இதற்காக வருடாந்தம் லொத்தர் குலுக்கல் நடைபெற்று வருகின்றதுடன், Diversity Program எனும் இந்தக் குழுக்கள் முறையில் விண்ணபிப்பதற்கு இலங்கையர்களும் தகுதியுடைவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டில் அமெரிக்க வதிவிட உரிமை பெறுவதற்கான DV-2018 குலுக்கல் திட்டத்துக்கு ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி வரை விண்ணப்பிக்க கால வரையறை கொடுக்கப்பட்டுள்ளது.
www.dvlottery.state.gov எனும் இணையத்தளத்தின் மூலம் மாத்திரமே இதற்காக விண்ணப்பங்களை விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.