இரண்டு துப்பாகிகள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

238 0

கொள்ளையிடப்பட்ட 500 கோடி ரூபா பெறுமதியான நீல வைரத்துடன் கைதான கெவுமா என அறியப்படும் கெலும் இந்திக்கவிடமிருந்த இரண்டு துப்பாகிகள் குறித்து விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நபரைக் கைதுசெய்ததன் பின்னர் பெரும்பாலான பாதாள உலகக் குழுவினர் அச்சமடைந்துள்ளனர் என பொலிஸ்  புலனாய்வுத் தகவல்கள் ஊடாக அறியமுடிவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கெவுமா என அறியப்படும் கெலும் இந்திக்கவை 7 நாட்கள் தடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கெவுமா என அறியப்படும் கெலும் இந்திக்க தற்காலிகமாக தங்கியிருந்த இரண்டு வீடுகளில் இருந்து தோட்டாக்கள் உள்ளிட்ட சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.