மைத்திரி பொய் கூறினார் – மஹிந்த

349 0

625-500-560-350-160-300-053-800-900-160-90தாமரைத் தடாகம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியது முற்றிலும் பொய் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமரைத் தடாகம் கலையரங்கை அமைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவே அடிக்கல் நாட்டியதாகவும், அந்த நினைவுப் பலகையை அகற்றிவிட்டு மஹிந்த ராஜபக்ஸ புதிய நினைவுப் பலகையை வைத்ததாகவும் ஜனாதிபதி மைத்திரி கூறியுள்ளார்.

எனினும் இந்த கருத்தை மஹிந்த மறுத்துள்ளார்.

சந்திரிக்காவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நினைவுப் பலகை அகற்றப்படவில்லை எனவும், அதற்கு அருகில் வேறு ஒரு நினைவுப் பலகையை நிர்மாணித்ததாகவும் மஹிந்தவின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.