வித்தியா வழக்கு விசாரணை இளஞ்செழியன் கையில்

373 0

k800_20151109_104004புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் விசாரணைக்காக மாற்றம் செய்யப்படவுள்ளது என்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.றியால் தெரிவித்தார்.
கடந்த வருடம் மே மாதம் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த புங்குடுதீவு மாணவி கடத்திச் செல்லப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இச் சம்பவம் தொடர்பில் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக வழக்கு நடைபெற்று வருகின்றது.
இதன்படி இன்று செவ்வாக்கிழமையும் குறித்த வழங்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்விசாரணையின் போது கொலை செய்யப்பட்ட வித்தியா சார்பில் மன்றில் தோண்றிய இளம் சட்டத்தரணி ரஞ்சித்குமார் வித்தியா வழக்கு விசாரணை எந்த கட்டத்தில் உள்ளது என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த நீதவான் குறித்த வழக்கு விசாரணைகள் முடிவுற்ற நிலையில் விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும், இக் கொலைச் சம்பவத்தினை விசாரணை செய்துவரும், குற்றப் புலனாய்வு பிரிவினருக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலில் வழக்கினை யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி குறித்த வழக்கின் குற்றப் பகிர்வு பத்திரத்தை மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் பாரப்படுத்தும் என்று தெரிவித்தார்.