திருவனந்தபுரம் தொகுதியில் எம்எல்ஏ திவாகரனை நிறுத்துகிறது மார்க்சிஸ்ட்

275 0

பாராளுமன்றத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் எம்எல்ஏ திவாகரனை நிறுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி ஒப்பந்தம் மற்றும் வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணியின் (எல்டிஎப்) முக்கிய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் முன்னாள் மாநில அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான சி.திவாகரனை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல், திரிசூர் தொகுதியில் ராஜாஜி மேத்யூ தாமஸ், மாவேலிக்கரை தொகுதியில் எம்எல்ஏ சித்தயம் கோபகுமார், வயநாடு தொகுதியில் பி.பி.சுனீர் ஆகியோரை வேட்பாளராக அறிவிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் 2 எம்எல்ஏக்கள் மக்களவைத் தேர்தலில் களமிறக்க கட்சி முடிவு செய்துள்ளது. 

இந்த 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து மாநிலக் குழு கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 7-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

திருவனந்தபுரம் தொகுதியில் 2009 மற்றும் 2014  தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் அடுத்தடுத்து வெற்றி பெற்றார். இந்த முறையும் அவர் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை எதிர்த்து திவாகரன் களமிறங்குகிறார். பாஜக வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.